நேசி... நேசி... நேசி...
உருவம் மற-
கவர்தல் மற -
கனவு மற-
நேசிக்க முடியுமா?யோசி-
அழிதல் பற்றிய புரிதல்-
உன்னுள்ளே நிகழ்ந்தால்-
முடியும் எல்லாம் முடியும்-
நேசிக்க முடியும்.
நேசமும் முடியும்.
பெயர் பொருட்டல்ல-
குரல் பொருட்டல்ல-
குழைவு பொருட்டல்ல-
வெளியோடும் உயிரே உள்ளோடும்.
உள்ளும் புறமும் ஒரு புள்ளி.
நீ புள்ளி.
நான் புள்ளி.
நாம் புள்ளி.
அழித்தலும்,இணைத்தலும்
அவரவர் விருப்பம்-
விருப்பதால் இணையும்-
வெறுக்கத் தெரியாதது தனியே திரியும்-
எங்ஙனம் புள்ளிஅழியும்.?
நீ முந்தி-
நான் பிந்தி-
காலம் கணக்கிடும்-
பூஜ்யத்தில்
எது முந்தி-
எது பிந்தி-
நேசிப்பின் குரல் அடங்காது-
மௌனமாய் பிளிரும் -
மௌனத்தை
யார் அடக்க-யார் அடைக்க -
புகைத்தல் நெஞ்சுக்குள்-
எரிதல் பேச்சுக்கள்
-
எப்படிப் புகையடக்க -
எப்படிப் பேச்செரிக்க-
கனவை அறுத்துத் தூர எறி
கண்களை?
பிரியத்தைத் புதை-
ஞாபகம் வளர்-
நிஜத்தை?
ஒன்றுமில்லை-
எல்லாம் சரியே-
எல்லாம் தவறே-
சரிக்கும் தவறுக்கும்
சமமோ சமம்-
ஒன்றுமில்லை-
இழத்தல் யாருக்கு?
பெறுதல் யாருக்கு?
இழத்தலும் பெறுதலும்
இல்லை உயிருக்கு-
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
-
கரங்களை இழந்த ஈழத்துக் குழந்தைகளுக்கும்
இனிக்கட்டும் செங்கரும்பு.
கணவன்களை இழந்த ஈழத்துப் பெண்களுக்கும்
பொழியட்டும் புது மஞ்சள்
வயல்களை இழந்த ஈழத்து வி...
1 month ago
1 comments:
nantru.
paaraaddukal.
http://kaatruveli-ithazh.blogspot.com/
Post a Comment