வண்ணம் தீட்டப்பட்ட
பட்டாம்பூச்சியின்
இறகு பிடித்துத் தூக்கி-
விரல் பிசுபிசுக்க நிறம் ஒட்டியபடி
உன் அம்மாவைக் கடிக்க விட்டுத்
தூக்கி வந்து
மீண்டும் புத்தகத்தில் மேய விட
உன்னால் முடிந்தது.
வேண்டுமென்றே
கால்செருப்பை மாற்றிப் போட்டு-
'அம்மா மாத்திப் போடுப்பா தம்பி' சொல்லும்மா
எனச் சொல்லி வியப்படைய
உன்னால் முடிந்தது.
புத்தகத்தின் சித்திரத்தில்
கதவோரம் தலை நீட்டிக் கொண்டிருக்கும்
எலிக் குஞ்சைப் பார்த்து
'உள்ளே போ! மியாவ் வருது'
என எச்சரிக்க
உன்னால் முடிந்தது.
தொட்டில் பாடைகட்டி
தோள் சுமந்து தூக்கிவந்து
கருவேல மரத்தின் கீழ்
என்
காற்றே உன்னைப் புதைத்த பின்
என்னால் சுவாசிக்க முடியலியே!
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
-
கரங்களை இழந்த ஈழத்துக் குழந்தைகளுக்கும்
இனிக்கட்டும் செங்கரும்பு.
கணவன்களை இழந்த ஈழத்துப் பெண்களுக்கும்
பொழியட்டும் புது மஞ்சள்
வயல்களை இழந்த ஈழத்து வி...
1 month ago
0 comments:
Post a Comment