Monday, October 18, 2010

நசுக்கப்பட்ட குழந்தைகளே...



செம்மொழித் தமிழகத்தில் எரிக்கப்பட்ட...

ஈழத்தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட...

ஜார்க்கண்ட்டில் விரல்கள் அறுக்கப்பட்ட...

போபாலில் நச்சுப் புகையில் கருக்கப்பட்ட...

காஷ்மீர் ஏரியில் அமிழ்த்தப்பட்ட...

ஈராக்கிலும்...

ஆப்கானிஸ்தானிலும்...

கியூபாவிலும்....

அயர்லாந்திலும்...

நசுக்கப்பட்ட குழந்தைகளே...

குழந்தைகளே.

என் மகவை

அழுகையோடு பிரிந்த

இந்த ஒரு நாள்

பொருளியல் பயணத்தில் கதறுகிறேனே

என்ன மனிதன் நான்?


0 comments: