Sunday, January 17, 2010

எரிக்க முடியா மயானம்...


உன் உள்ளும் ஒரு மயானம்
பொடிந்து சுடச்சுட இருக்கும்;
விபத்தில் இறந்து போன கனவுகள்;
தூக்க மாத்திரையில் விழி வெறிக்க
சுவாசம் நின்று போன இலட்சியங்கள்;
திசை தெரியாமல் இருண்டுபோய்
உச்சி என நினைத்து
பள்ளத்தாக்கில் பாய்ந்து
முகம் சிதறி-
காக்கை கொத்த தீனியான
கொள்கைகள்;

இவற்றையெல்லாம்
வேறெங்கு
எரித்திருக்கப் போகிறாய்
உன்னுள்ளே மயானம் இருக்க...

0 comments: