Sunday, January 17, 2010

புன்னகையை பிய்த்தெறிதல்

அப்போதெல்லாம் சாயங்காலம்
'டிப்பி டிப்பி தாஸ்; வாட் கலர் இஸ்' என
வண்ண மயமாய் விளையாடுவோம்.

புழுதி பறக்க புளியங்கொட்டைகளை
ஓடு விட்டெறிந்து செதுக்கி விளையாடுவோம்.

பளிங்கு மாதிரி கண்ணுள்ள தட்டானின் வாலில்
நூல் கட்டி, பறக்கும் திசையில் ஓடி விளையாடுவோம்

'இச்சா,இனியா, காயா, பழமா 'எனக்கேட்டு
கண் திறக்காமல் கரம் தாண்டி விளையாடுவோம்.

இடது கை நடுவிரலில் கவண் மாதிரி கோலிக்குண்டு பொருத்தி
குறி பார்த்து அடித்து விளையாடுவோம்.

மழை நின்ற மாலை நேரத்திலெல்லாம்
கொட்டாங்குச்சியில் ஈர மண்ணிட்டு
இட்லி கவிழ்த்து விளையாடுவோம்.

அப்பொழுதெல்லாம்
எந்த விளையாட்டிலும்
நீயும் இல்லை; உன் ஞாபகமும் இல்லை

0 comments: