யாரையும் அடிக்காத 'கமலம்' டீச்சரின் பிரம்பும்,
காரை பெயர்ந்து மண்புழுதி அடிக்கும் ஒண்ணாம் வகுப்பும்,
மழை வாசம் அடிக்கும் சிலேட்டு பென்சிலும்,
மூக்கொழுக போட்டியாய் படிக்கும் சோமசுந்தரமும்,
துவைத்த சட்டையும், கிழியாத டவுசரும்,
மிளகாப்பொடி தூவி நவாப்பழம் விற்பவரும்,
பத்து பைசாவிற்கு பெட்டி திறக்கும் ஐஸ்காரரும்,
'ஆ' எழுத தெரியாமல் ஒண்ணுக்கிருந்த சிவலிங்கமும்,
பள்ளிக்குப்போகும் வழியில் 'அண்ணா மன்றமும்' ,
நொண்டியும், கபடியும், குண்டு விளையாட்டும்,
உரச்சாக்கு பையில் இலவசப்புத்தகமும்,
வறுத்த அரிசியும், வெல்லக்கட்டியும்,
இரண்டாம் வகுப்பு படிக்கும் தாஸ் அண்ணனும்,
'மழை வருது, மழை வருது நெல்அள்ளுங்கோ' பாட்டும்
எனக்கு அறிமுகமான அதே பொழுதுகளில்-
எங்கோ பிறந்திருக்கிறாய்
சக பயணியாய்.

0 comments:
Post a Comment